தியேட்டர்கள் ஓட்டல்களில் 50 சதவீதம் பேருக்கு அனுமதி
திருப்பூர் மாவட்டம் முழுவதும் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. தியேட்டர்கள், ஓட்டல்களில் 50 சதவீதம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்று அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் முழுவதும் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. தியேட்டர்கள், ஓட்டல்களில் 50 சதவீதம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்று அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
கட்டுப்பாடுகள் அமல்
கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் தாக்கம் எதிரொலியாக தமிழக அரசு சார்பில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நேற்று முதல் வருகிற 10-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது. திருப்பூர் மாவட்டத்திலும் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டன.
உணவகங்கள், விடுதிகள், பேக்கரிகள், தங்கும் விடுதிகள் மற்றும் லாட்ஜ்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக திருப்பூர் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், பேக்கரி, டீக்கடைகளில் ஏற்கனவே போடப்பட்டு இருந்த இருக்கைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைத்தனர்.
பூங்காவில் குவிந்தனர்
பொழுது போக்கு, கேளிக்கை பூங்காக்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு என்பதால் நேற்று திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள மாநகராட்சி பூங்காவில் குடும்பம், குடும்பமாக வந்து பொழுதை கழித்தனர். அதுபோல் வடமாநில இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகம் குவிந்தனர்.
திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்தவும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேருக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. துணிக்கடைகள், நகைக்கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாநகரில் உள்ள பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளில் இருக்கைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 50 சதவீத வாடிக்கையாளர்களை அனுமதித்தனர்.
தியேட்டர்கள்
உடற்பயிற்சி நிலையங்களில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்களில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து பயணிகள் பயணிக்க அனுமதித்தனர். தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். திருப்பூரில் உள்ள தியேட்டர்களில் ஒரு இருக்கை இடைவெளி விட்டு மற்றொரு இருக்கையில் அமரும் வகையில் குறியீடு செய்யப்பட்டு 50 சதவீதம் பார்வையாளர்கள் சினிமாவை கண்டு களித்தனர்.
உள்விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50 சதவீதம் பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அழகு நிலையங்கள், சலூன்களில் ஒரேநேரத்தில் 50 சதவீதம் பேர் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்று சுகாதாரத்துறையினர் திருப்பூர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story