கள்ளக்குறிச்சியில் கஞ்சா கடத்தல் 3 பேர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்


கள்ளக்குறிச்சியில்  கஞ்சா கடத்தல் 3 பேர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Jan 2022 9:13 PM IST (Updated: 1 Jan 2022 9:13 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் கஞ்சா கடத்தல் 3 பேர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்


கள்ளக்குறிச்சி

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின் பேரில்  கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார்  ஏமப்பேர் புறவழிச்சாலை பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் 2 பேர் கஞ்சா வாங்கினர். இதைப்பார்த்த போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். 

விசாரணையில் அவர்கள் சின்னசேலம் தாலுகா கடத்தூர் கிராமத்தைசேர்ந்த ரவி மகன் கோபாலகிருஷ்ணன்(வயது 26), சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா நாவக்குறிச்சி  குமரேசன்(24), நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணத்தூரை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பதும், கோபாலகிருஷ்ணன் சின்னசேலத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பாபு என்பவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கல்வராயன்மலைக்கு சென்று அங்கிருந்து கஞ்சா கடத்தி வந்து பாபுக்கு போன் செய்தார். பின்னர் அவரது அறிவுரையின் பேரில் குமரேசன் மற்றும் சிறுவன் இருவரும் கோபாலகிருஷ்ணனிடம் கஞ்சாவை வாங்க வந்தபோது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story