திருக்கோவிலூரில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது


திருக்கோவிலூரில்  லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2022 9:22 PM IST (Updated: 1 Jan 2022 9:22 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது



திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையில் போலீசார் நகர பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் லாட்டரி சீ்ட்டு விற்பனை செய்த சந்தப்பேட்டையை சேர்ந்த ஆதிமூலம்(வயது 56), கிழக்குத் தெரு பாலச்சந்திரன்(42) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 28 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர். 

அதேபோல் கட்டகோபுர வீதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதற்காக நின்று கொண்டிருந்த திருக்கோவிலூர் செவலைரோடு, அண்ணாநகரை சேர்ந்த கண்ணன்(53), 5 முனை ரோடு பகுதியில் லாட்டரி சீ்ட்டு விற்பனை செய்து கொண்டிருந்த வடக்கு வீதியை சேர்ந்த பாலாஜி(42) ஆகியோரை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து 40 லாட்டரி சீ்ட்டுகளை பறிமுதல்செய்தனர்.  

Next Story