பஸ் நிறுத்தத்தில் போலீசார் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம
நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் போலீசார் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடினர்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் போலீசார் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடினர்.
நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் போலீஸ் நிலையம் சார்பில் பொதுமக்கள்-போலீசாரின் நண்பர் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்துப் போலீசாரும் பொதுமக்களுடன் இணைந்து ஆங்கில புத்தாண்டைகொண்டாடினர்.
வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் தலைமை தாங்கி கேக் வெட்டி கொண்டாடினர். பஸ் நிறுத்தத்தில் இருந்த பொதுமக்களுக்கு கேக் வழங்கினர்.
நிகழ்ச்சியில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். போலீசாருடன் சேர்ந்து பொதுமக்களும் புத்தாண்டை வரவேற்றனர்.
---
Image1 File Name : 8232061.jpg
----
Reporter : KALAISELVI MURALI Location : Vellore - JOLARPET
Related Tags :
Next Story