ஆங்கில புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஆங்கில புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
விழுப்புரம்,
2021-ம் ஆண்டு முடிந்து நேற்று 2022-ம் ஆண்டு பிறந்தது. இதையொட்டி புத்தாண்டை வரவேற்கும் விதமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி ஆனதும் மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.
புத்தாண்டையொட்டி விழுப்புரத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயம், சி.எஸ்.ஐ. தூய ஜேம்ஸ் ஆலயம், சேவியர் காலனி தூய பவுல் மிஷினரி ஆலயம், விழுப்புரம் நகர போலீஸ் நிலையம் அருகில் உள்ள டி.இ.எல்.சி. ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
செஞ்சி
இதேபோல் செஞ்சியில் உள்ள கிறிஸ்தவ புனித மிக்கேல் தேவாலயம் மற்றும் சி.எஸ்.ஐ. கன்மலை கிறிஸ்தவ ஆலயம் என்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
Related Tags :
Next Story