யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் நடத்தப்படுமா


யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் நடத்தப்படுமா
x
தினத்தந்தி 1 Jan 2022 10:05 PM IST (Updated: 1 Jan 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டாவது யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில் யானை பாகன்கள் உள்ளனர்.

ராமேசுவரம், 
இந்த ஆண்டாவது யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில் யானை பாகன்கள்  உள்ளனர்.
புத்துணர்வு முகாம்
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் உள்ள யானை களுக்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் இருந்து 48 நாட்கள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம் பட்டியில் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். 
இந்த புத்துணர்வு முகாமில் கலந்து கொள்ளும் யானை களுக்கு தினமும் சிறப்பு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப் படும். இதனால் இந்த 48 நாட்கள் யானைகள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் புத்துணர்வுடன் முகாமில் பங்கேற்கும். இந்த புத்துணர்வு முகாமில் ராமேசுவரம் கோவில் யானை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பங்கேற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கோவில்களில் உள்ள யானைகளுக்கான புத்தாண்டு நல்வாழ்வு முகாம் இதுவரை யிலும் நடத்தப்படுவது குறித்து தமிழக அரசு சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.
எதிர்பார்ப்பு
இந்த ஆண்டு புத்துணர்வு முகாம் நடைபெறுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரையிலும் தமிழக அரசு சார்பில் வராததால் ராமேசுவரம் உள்ளிட்ட அனைத்து கோவில்களில் உள்ள யானை பாகன்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இதுபற்றி ராமேசுவரம் கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆண்டுதோறும் 48 நாட்கள் நடத்தப்படும் யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாம் குறித்து இதுவரையிலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. முகாம் நடத்தப்படுமா என்பது குறித்தும் இதுவரை தெரிய வில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story