மாற்றுத்திறனாளிகளுடன் புத்தாண்டு கொண்டாடிய கலெக்டர்
மயிலாடுதுறை அன்பகம் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுடன் புத்தாண்டு விழாவை கலெக்டர் லலிதா கொண்டாடினாா்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அன்பகம் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுடன் புத்தாண்டு விழாைவ கலெக்டர் லலிதா கொண்டாடினாா்.
புத்தாண்டு விழா கொண்டாட்டம்
மயிலாடுதுறையில் உள்ள அன்பகம் இல்லத்தில் 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் உள்ளனர். ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் லலிதா தனது மகளுடன் சென்று கேக்வெட்டி கொண்டாடினார்.
அப்போது குழந்தைகளுக்கு கேக் ஊட்டி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அங்குள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கலெக்டர் இனிப்புகள் வழங்கினார்.தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் தங்குமிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அன்பகம் இல்லத்திற்கு அரசு சார்பில் தேவையான உதவிகளை பெற்று தருவதாக அதன் நிர்வாகி திருஞானசம்பந்தத்திடம் தெரிவித்தார். தொடர்ந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளை கலெக்டர் பாராட்டினார். அப்போது அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story