கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது மும்பையில் 6 ஆயிரம் பேருக்கு தொற்று


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 1 Jan 2022 11:18 PM IST (Updated: 1 Jan 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது. மும்பையில் 6 ஆயிரத்து 347 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை, 
மராட்டியத்தில் புதிதாக 6 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது. மும்பையில் 6 ஆயிரத்து 347 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
9 ஆயிரத்தை தாண்டியது
மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மீண்டும் மின்னல் வேகத்தில் பரவத்தொடங்கி உள்ளது. இதில் நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் தொற்று பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது. அதன்படி மாநிலத்தில் புதிதாக 9 ஆயிரத்து 170 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.
 இதனால் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 225 ஆக அதிகரித்து உள்ளது. 10 நாட்களுக்கு முன் வரை இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று வைரஸ் நோய்க்கு 7 பேர் பலியானார்கள். மாநிலத்தில் இதுவரை 66 லட்சத்து 87 ஆயிரத்து 991 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 65 லட்சத்து 10 ஆயிரத்து 541 பேர் குணமாகி உள்ளனர். 1 லட்சத்து 41 ஆயிரத்து 533 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மும்பை நிலவரம்
மும்பையில் புதிதாக 6 ஆயிரத்துரு 347 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 ஆயிரத்து 712 பேருக்கு அறிகுறிகள் இல்லை என மாநகராட்சி தொிவித்து உள்ளது. நேற்று முன்தினம் நகரில் 5 ஆயிரத்து 428 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருந்தது. 
இந்தநிலையில் ஒரேநாளில் கூடுதலாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நகரில் ஆஸ்பத்திரிகளில் 30 ஆயிரத்து 565 படுக்கைகள் இருப்பதாகவும், இதில் 2 ஆயிரத்து 760 மட்டும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
ஒமைக்ரான் பாதிப்பு
இதேபோல மாநிலத்தில் மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3 பேர் புனே ஊரகப்பகுதியையும், 2 பேர் பிம்பிரி சிஞ்வட்டையும், ஒருவர் புனே மாநகராட்சி பகுதியையும் சேர்ந்தவர்கள். மாநிலத்தில் இதுவரை 460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இதில் 180 பேர் குணமடைந்து உள்ளனர்.

Next Story