மகாலிங்கசாமி கோவிலில் தைப்பூச திருவிழா


கொடியேற்றத்தின் போது சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் எழுந்தருளினார்.
x
கொடியேற்றத்தின் போது சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் எழுந்தருளினார்.
தினத்தந்தி 2 Jan 2022 12:27 AM IST (Updated: 2 Jan 2022 12:27 AM IST)
t-max-icont-min-icon

திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிடைமருதூர்:-

திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

மகாலிங்கசாமி கோவில்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் பெருநலமா முலையம்மை உடனாகிய மகாலிங்கசாமி கோவில் உள்ளது. 27 நட்சத்திரங்களுக்கு தனித்தனி சன்னதி கொண்ட பிரசித்தி பெற்ற தலமாகவும், பிரம்மகத்தி தோஷம் போக்கும் தலமாகவும் போற்றப்படும் இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 
அதன்படி இந்த ஆண்டும் விழா விநாயகர் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி உற்சவர் விநாயகர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். பின்பு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது 

தேரோட்டம்

இதில் அம்பலவாண தம்பிரான் கட்டளை சுவாமிகள் முன்னிலை வகித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வருகிற 17-ந் தேதி (திங்கட்கிழமை) 5 பெரிய தேர்கள் வீதி உலாவும், 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காவிரியில் தைப்பூச தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. 
தைப்பூச திருவிழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனம் ஆலோசனையின்பேரில் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story