12 மணி நேரம் தொடர்ந்து ஓவியம் வரைந்து சாதித்த மாணவி


12 மணி நேரம் தொடர்ந்து ஓவியம் வரைந்து சாதித்த மாணவி
x
தினத்தந்தி 2 Jan 2022 1:28 AM IST (Updated: 2 Jan 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

தாயில்பட்டி அருகே 12 மணி நேரம் தொடர்ந்து ஓவியம் வரைந்து மாணவி சாதனை படைத்தார்.

தாயில்பட்டி, 
தாயில்பட்டி அருகே உள்ள விஜயரெங்காபுரம் ஊராட்சி மீனாட்சிபுரத்தை சேர்ந்த அய்யனார் என்பவர் மகள் புவனேஸ்வரி. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆர்கிடெக்சர் 3-வது ஆண்டு படித்து வருகிறார். விடுமுறையில் சொந்த ஊர் வந்திருந்தபோது தொடர்ந்து 12 மணி நேரம் ஓவியம் வரையும் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆன்லைனில் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்திருந்தார். இந்நிறுவனம் ஏற்று 12 மணிநேரம் ஓவியப்போட்டியை வீடியோ பதிவு செய்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டிருந்தனர். அதன்படி நேற்றுமுன்தினம் காலை 10 மணிக்கு தொடங்கிய ஓவியப் போட்டி இரவு 10 மணி வரை நிறுத்தாமல் ஓவியங்களை வரைந்திருந்தார். இந்த வீடியோ பதிவை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஏற்றுக்கொண்டு அவருக்கு சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கியுள்ளனர். சாதனை படைத்த மாணவி புவனேஸ்வரியை கிராம மக்கள் பாராட்டினர்.


Next Story