தோவாளை அருகே மின்சாரம் தாக்கிய குரங்குக்கு சிகிச்சை


தோவாளை அருகே மின்சாரம் தாக்கிய குரங்குக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 2 Jan 2022 1:47 AM IST (Updated: 2 Jan 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கிய குரங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆரல்வாய்மொழி, 
தோவாளை பண்டாரபுரம் அருகே சானல் கரையோரம் குரங்கு ஒன்று மின்சாரம் தாக்கி கீழே விழுந்து மயங்கிய நிலையில் கிடந்தது. இதை பார்த்தவர்கள் ஆரல்வாய்மொழி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த குரங்கை அருகில் உள்ள ஜீவகாரூண்ணிய விலங்குகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து மந்திக்கு டாக்டர் சிசிச்சை அளித்தார். சிகிச்சைக்கு பின் மந்தி உயிர் பிழைத்தது. பின்னர் மந்தி புலியூர்குறிச்சி அருகே உள்ள உதயகிரி கோட்டைக்கு கொண்டு சென்றுவிடப்பட்டது.

Next Story