சிலம்பாட்ட போட்டி


சிலம்பாட்ட போட்டி
x
தினத்தந்தி 2 Jan 2022 1:54 AM IST (Updated: 2 Jan 2022 1:54 AM IST)
t-max-icont-min-icon

மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி

மதுரை
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி மதுரையில் நடந்தது. "வேர்ல்டு கோஜுரியு கராத்தே பள்ளி" மற்றும் சாய் பாரம்பரிய கலை பள்ளி இதற்கான ஏற்பாடுகளை செய்தது. இதில் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், மதுரை வைகை மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி பள்ளி சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள், 17 தங்கம், 21 வெள்ளி, 12 வெண்கல பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கராத்தே ராஜா மற்றும் சாய் சுதாகர், வைகை மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளர்கள் பாலமுருகன், ரகுராமன் மற்றும் துணை பயிற்சியாளர்கள் திவாகர், ரம்யா, சந்தியா ஆகியோர் பாராட்டினர்.

Next Story