பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் கொரோனா பாதிப்பு அதிகம்
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
அடுக்குமாடி குடியிருப்புகளில்...
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு பிறப்பித்துள்ளது. எலகங்கா, மகாதேவபுரா, பொம்மனஹள்ளி உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் பயணம் மேற்கொள்வது தான். எலகங்கா உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டு வருவதன் காரணமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
தினமும் 50 ஆயிரம் பேருக்கு...
பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூருவில் கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது தினமும் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story