பெங்களூரு நகரில் 35 ஆயிரம் ஆட்டோக்கள் சட்டவிரோதமாக ஓடுகிறது


பெங்களூரு நகரில் 35 ஆயிரம் ஆட்டோக்கள் சட்டவிரோதமாக ஓடுகிறது
x
தினத்தந்தி 2 Jan 2022 2:56 AM IST (Updated: 2 Jan 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு நகரில் 35 ஆயிரம் ஆட்டோக்கள் சட்டவிரோதமாக ஓடுவதாக மண்டல போக்குவரத்து துறை அதிகாரி கூறியுள்ளார்.

பெங்களூரு: பெங்களூரு நகரில் 35 ஆயிரம் ஆட்டோக்கள் சட்டவிரோதமாக ஓடுவதாக மண்டல போக்குவரத்து துறை அதிகாரி கூறியுள்ளார்.

35 ஆயிரம் சட்டவிரோத ஆட்டோக்கள்

பெங்களூரு நகரில் இயங்கும் வாகனங்களில் பாதி அளவுக்கு ஆட்டோக்கள் ஓடுகிறது. பெங்களூரு நகரில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகிறது. ஆனால் அதில் 35 ஆயிரம் ஆட்டோக்கள் சட்டவிரோதமாக ஓடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சாந்திநகரில் உள்ள மண்டல போக்குவரத்து துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் வி.கே.மூசா என்ற அதிகாரி கூறியதாவது:-

பெங்களூரு நகரில் 1.35 லட்சம் ஆட்டோக்கள் ஓடுகிறது. இதில் ஒரு லட்சம் ஆட்டோக்கள் மட்டுமே முறையான அனுமதியுடன் ஓடுகிறது. 35 ஆயிரம் ஆட்டோக்கள் சட்டவிரோதமாக ஓடுகிறது. சட்டவிரோத ஆட்டோக்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனால் அவற்றை போலீஸ் நிலையங்களில் நிறுத்த இடம் இல்லாததால் தற்போது போக்குவரத்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை.

முகாம்கள் நடத்த வேண்டும்

அதே நேரம் போக்குவரத்து துறையிலும் ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆட்டோக்களை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை எப்.சி.க்கு விட வேண்டும். ஆனால் சில ஆட்டோ டிரைவர்கள் இதற்கு வருவது இல்லை என்றார். இதுகுறித்து ஆதர்ஷ் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தின் செயலாளர் சம்பத் கூறும்போது, பெங்களூரு நகரில் சட்டவிரோதமாக ஆட்டோக்கள் ஓடுவது உண்மை தான்.

போக்குவரத்து துறை, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இணைந்து சட்டவிரோத ஆட்டோக்களை முறைப்படுத்த முகாம்கள் நடத்த வேண்டும். ஆனால் முகாம்கள் நடத்தினால் ஆட்டோ டிரைவர்களிடம் பணம் வசூலிக்க முடியாது என்று அதிகாரிகள் கருதுகிறார்கள் என்றார்.

Next Story