கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கர்நாடகத்தில் ரூ.974 கோடிக்கு மதுபானம் விற்பனை
கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கர்நாடகத்தில் ரூ.974 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக கலால் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு: கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கர்நாடகத்தில் ரூ.974 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக கலால் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரூ.974 கோடிக்கு மது விற்பனை
கர்நாடகத்தில் பண்டிகை தினங்களில் பல கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2021) டிசம்பர் மாதம் 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கர்நாடகத்தில் ரூ.974 கோடிக்கு மது விற்பனை நடந்து உள்ளது. இதுகுறித்து கலால்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் கலால்துறைக்கு வருமானம் குறைந்து இருந்தது. கடந்த 2020-ம் ஆண்டின் இறுதியில் அதாவது டிசம்பர் 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 14 லட்சத்து 14 ஆயிரத்து பெட்டிகளில் இருந்த மதுபானம் விற்பனை ஆகி இருந்தது. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 17 லட்சத்து 14 ஆயிரத்து பெட்டிகளில் இருந்த மதுபானம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
15.39 சதவீதம் அதிகம்
இதுபோல கடந்த 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 10.90 லட்சம் பெட்டி பீர் வகைகள் விற்பனை ஆனது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 9 லட்சம் பெட்டி பீர் வகைகள் விற்பனையானது.
Related Tags :
Next Story