சேலம் மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா பாதிப்பு


சேலம் மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 2 Jan 2022 3:04 AM IST (Updated: 2 Jan 2022 3:04 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 25 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி மற்றும் சேலம் ஒன்றிய பகுதிகளில் தலா 13 பேர், ஆத்தூர் பகுதியில் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 27 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 310 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1 லட்சத்து 2 ஆயிரத்து 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story