கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 2 Jan 2022 3:31 AM IST (Updated: 2 Jan 2022 3:31 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 
கோபி
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மேலும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
கோபி மொடச்சூர் ரோட்டில் உள்ள இம்மானுவேல், கோபி சி.எஸ்.ஐ. தேவாலயங்கள், பெந்தகொஸ்தே சர்ச் ஆகியவற்றில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
அந்தியூர்
அந்தியூர் சி.ஐ.ஜி. தேவாலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். நகலூர் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நேற்று காலை 9 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
அந்தியூர் பகுதியில் உள்ள மைக்கேல் பாளையம், தவிட்டுபாளையம், அத்தாணி, ஆப்பக்கூடல், பர்கூர், புதுப்பாளையம், சங்கராப்பாளையம் உள்பட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். கேக் வெட்டி ஒருவருக்கொருவர் வழங்கியும் கொண்டாடினர். சிறுவர்-சிறுமிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
கொடுமுடி
கொடுமுடி மார்க்கெட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை பாதிரியார் ஜேம்ஸ் ஸ்கடர் தலைமையில் நடைபெற்றது.

Next Story