நெல்லை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
ஆராய்ச்சி படிப்புக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
பேட்டை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பிஎச்.டி. பட்டங்கள் பதிவுக்கான தகுதித்தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளுக்கான பாடப்பிரிவுகள், தகுதிகள், கட்டண விவரம், அனுமதி நெறிமுறைகளை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.msuniv.ac.in) தெரிந்து கொள்ளலாம்.
தகுதி தேர்வுக்கான கட்டணம் ரூ.2 ஆயிரம். இணையதளம் வரும் 5-ந்தேதி திறக்கப்படும். விண்ணப்பிக்க 29-ந்தேதி கடைசி நாள் ஆகும். வருகிற பிப்ரவரி 10 மற்றும் 11-ந் தேதிகளில் தேர்வு நடக்கும். இந்த தகவலை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) மருதுகுட்டி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story