மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபர் கைது
புத்தாண்டு கொண்டாட்ட கட்டுப்பாடுகளை மீறி மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி கடந்த 31-ந்தேதி இரவு கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றபடி, மோட்டார் சைக்கிளின் முன் சக்கரம் அந்தரத்தில் இருக்கும் வகையில் தூக்கியபடி சாகசம் செய்த காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபத்தான முறையில் பயணம் செய்தது, சென்னை தரமணி எம்.ஜி.ஆர். நகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த விஜயன் (வயது 28) என்பது தெரியவந்தது. விஜயனை போலீசார் கைது செய்தனர். அவருடைய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story