யாகசாலை அமைக்கும் பணி மும்முரம்
யாகசாலை அமைக்கும் பணி மும்முரம்
உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27ம்தேதி நடைபெற உள்ளதையொட்டி யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாரியம்மன் கோவில்
உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவில்கும்பாபிஷேகம் 1.2.2008அன்று டத்தப்பட்டது. ஆகமவிதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பதால் கடந்த ஆண்டு கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்கப்பட்டன. மூலவர் கோபுரம், ராஜகோபுரம், திருமதில்கள் ஆகிய இடங்களில் வர்ணம் பூப்பட்டது.அத்துடன் உற்சவர் சன்னதி புதியதாக கட்டப்பட்டது.இந்த அனைத்து திருப்பணிகளும் நிறைவடைந்தது.இதைத்தொடர்ந்து வருகிற 27ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
யாக சாலை
கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்காக கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. யாகசாலையில் மாரியம்மனுக்கு 9 குண்டங்கள், உற்சவர், விநாயகர், முருகர், பரிவார மூர்த்திகள் ஆகியோருக்கு தலா ஒரு குண்டம் வீதம் மொத்தம் 13 குண்டங்கள் அமைக்கப்படுகின்றன. அத்துடன் மாரியம்மன், உற்சவர், விநாயகர், முருகர், பரிவார மூர்த்திகள் ஆகியோருக்கு வேதிகைகள் அமைக்கப்படுகிறது.
யாகசாலை நிகழ்ச்சிகள் வருகிற 23ந் தேதி காலை9 மணிக்கு தொடங்குகிறது. 23, 24, 25ந் தேதிகளில் பல்வேறு பூஜைகள் நடக்கிறது. நிகழ்ச்சிகளை தொடர்ந்து 25ந் மாலை 7.45 மணிக்கு முதற்கால யாக வேள்வியும், 26-ம்தேதி புதன்கிழமை மாலை 6.45 மணிக்கு 2ம் கால யாக வேள்வியும், மாலை 4.45 மணிக்கு 3ம் கால யாக வேள்வியும் நடக்கிறது.
கும்பாபிஷேகம்
27- ந் தேதி காலை 7.40மணிக்கு 4ம்கால யாக வேள்வியும், 9.30மணிக்கு
யாத்ரா ஹோமம், கடம் புறப்பாடு நிகழ்ச்சிகளும் நடக்கிறது.காலை 10மணிக்கு மாரியம்மன், சக்தி விநாயகர், செல்வ முத்துக்குமரன், உற்சவர் சன்னதி விமானங்கள் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியும், 10.30 மணிக்கு
மாரியம்மன், சக்தி விநாயகர், செல்வமுத்துக்குமரன்
உற்சவர் சன்னதி, மூலவர் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
காலை 11.30 மணிக்கு மஹாபிஷேகம், தச தானம்,
தச தரிசனம், மகாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. மாலை 4.30மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், மாலை 7மணிக்கு திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
Related Tags :
Next Story