உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரம்


உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 2 Jan 2022 5:48 PM IST (Updated: 2 Jan 2022 5:48 PM IST)
t-max-icont-min-icon

உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

பூளவாடிபகுதியில் உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உருவார பொம்மைகள்
குடிமங்கலம் அருகே உள்ள .சோமவாரப்பட்டி.யில் மிகவும் புகழ் பெற்ற ஆல் கொண்ட மால்கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் தமிழர் திருநாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆல்கொண்ட மால் கோவில் திருவிழாவின்போது கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து ஆல்கொண்டமாலை தரிசனம் செய்து வருகின்றனர். ஆல் கொண்டமால் கோவில் கால்நடைகளின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. இத்திருவிழாவின் போது பக்தர்கள் மாடு உருவம், ஆண்,பெண்  கொண்ட உருவார பொம்மைகளை வாங்கி கோவிலில்வைத்து வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் உருவார பொம்மை தயாரிக்கும் பணி தீவிரமன நடந்து வருகிறது. 
 உருவார பொம்மைகள் தயாரிப்பு குறித்து தொழிலாளி கூறியதாவது
தயாரிப்பு குறைந்தது
கடந்த காலங்களில்உருவார பொம்மைகள் தயாரிப்பதற்கு கோதவாடி, கொழுமம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் மண் பயன்படுத்தப்பட்டது. மண் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் பூளவாடி பகுதியிலேயே குளங்களில் மண்எடுத்து உருவார பொம்மைகளை தயாரித்து வருகிறோம். இங்கு தயாரிக்கப்படும் உருவார பொம்மைகள் சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் மட்டுமின்றி பூளவாடி பகுதியில் உள்ள கோவில்களில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.
 இந்த ஆண்டு மாடு உருவம் கொண்ட உருவவார பொம்மைகள் ஜோடி 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரிய அளவிலான உருவாரபொம்மைகள் ஜோடி ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு மழை காரணமாக குளங்களில் மண் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணியும் குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story