புத்தாண்டு தினத்தில் ரூ.3.12 கோடிக்கு மது விற்பனை
தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தில் ரூ.3 கோடியே 12 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தில் ரூ.3 கோடியே 12 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.
டாஸ்மாக்
தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும் தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் ஊருக்கு ஒதுக்கு புறமாக திறக்கப்பட்டன. தற்போது, ஏற்கனவே இயங்கி வந்த இடங்களிலேயே டாஸ்மாக் செயல்பட தொடங்கி உள்ளது.
கொரோனா காலத்தில் ஊரடங்கு மற்றும் மதுபானங்களின் விலையேற்றம் மதுப்பழக்கத்தை சற்று குறைத்தது. ஆனாலும் பண்டிகை காலங்களில் அதிக அளவில் மதுபானங்கள் விற்பனையாவது வழக்கம். ஆனால் இந்த புத்தாண்டில் வழக்கமான நாட்களில் விற்பனையாவது போன்றே மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு சுமார் ரூ.2 கோடியே 42 லட்சத்துக்கும், 2020-ம் ஆண்டு ரூ.3 கோடியே 19 லட்சத்துக்கும், 2021-ம் ஆண்டு சுமார் ரூ.2 கோடியே 80 லட்சத்துக்கும் மதுபானங்கள் விற்பனையாகி இருந்தன.
ரூ.3 கோடி
இந்த ஆண்டு மதுவிற்பனை சற்று அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் புத்தாண்டு தினத்தன்று ஒரே நாளில் சுமார் ரூ.3 கோடியே 12 லட்சத்துக்கு மது விற்பனையாகி உள்ளது. இதில் 4 ஆயிரத்து 300 பெட்டி மதுபானங்கள், 1700 பெட்டி பீர் வகைகள் விற்பனையாகி உள்ளது.
கடந்த 31-ந் தேதி ஒரே நாளில் ரூ.2 கோடியே 90 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி இருந்தன.
இதனால் வழக்கமான நாட்களில் நடைபெறுவது போன்றே மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாகவும், பெரிய அளவில் விற்பனை அதிகரிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story