கோவில்களில் சிறப்பு பூஜை
கோவில்களில் சிறப்பு பூஜை
ஊட்டி
ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. ஊட்டி பழைய அக்ரஹாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 31-ந் தேதி முதல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. அன்று காலை 9 மணிக்கு ஹோமம், 12 மணிக்கு அலங்கார பூஜை, மாலை கனி அலங்காரம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. இந்தநிலையில் நேற்று காலை 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளினார். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும் சாமி தரிசனம் செய்தனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக சுவாமி வீதிஉலா வெளியில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இதனால் கோவில் வளாகத்தில் சுவாமி உலா வந்தார். அதேபோல் ஊட்டி வேலி வியூ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை ஒட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story