மூங்கில்துறைப்பட்டில் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம்


மூங்கில்துறைப்பட்டில்  அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2022 9:42 PM IST (Updated: 2 Jan 2022 9:42 PM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டில் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம்


மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் அங்குள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 2022-ம் ஆண்டு்க்கான புதிய நிர்வாகிகள் தேர்வில் தலைவராக செல்வராஜ், செயலாளராக ராஜாராம், பொருளாளராக கோகுல்ராம், துணைத் தலைவராக கனகராஜ், துணைச்செயலாளராக தர்பார், அமைப்பு செயலாளராக கார்த்திகேயன், தொகுதி செயலாளராக சீனிவாசன், அருள்ஜோதி, சந்திரசேகர், சட்ட ஆலோசகராக விஜயஆனந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் ஒருங்கிணைப்பாளர் டைமன்ராஜா வெள்ளையன் பேசுகையில் புகையிலை பொருட்கள் மூலம் சிறு வணிகர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய புகையிலை பொருட்களை அரசு முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டும். மேலும் சில ரவுடிகளின் துன்புறுத்தலின் பேரில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய வணிகர்கள் உள்ளாக்கப்படுவதை  தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதில் விழுப்புரம் மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் கண்ணன், பொருளாளர் முத்துகருப்பன் மற்றும் மாநில இணைச் செயலாளர் சீனிவாசன், சிவகுமார் செல்வராஜ், மாவட்ட இணைச்செயலாளர் சலீம், கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ், மூங்கில்துறைப்பட்டு மருத்துவ அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story