பழனி பாதயாத்திரை பக்தர்களை கண்காணிக்க பெண் போலீஸ் ரோந்து பணி தொடக்கம்
பழனி வரும் பாதயாத்திரை பக்தர்களை கண்காணிக்க பெண் போலீஸ் ரோந்து பணி ெதாடங்கப்பட்டுள்ளது.
பழனி:
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் ஆங்காங்கே தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதயாத்திரையாக வரும் பெண்கள், குழந்தைகளை கண்காணிக்கவும், அவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் பெண் போலீஸ் ரோந்து பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று பழனி மயில் ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது. போலீஸ் துணை சூப்பிரண்டு சத்யராஜ், இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் ரோந்து பணியை தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு சத்யராஜ் கூறுகையில், பாதயாத்திரை வரும் பெண்கள், குழந்தைகளிடம் நடக்கும் நகைபறிப்பு, பாலியல் தொல்லை, கடத்தல் போன்றவற்றை தடுக்க 11 பெண் போலீசார் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பக்தர்கள் பாதயாத்திரை வரும் பாதைகளில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் அவசர உதவிக்கு 181 என்ற எண்ணுக்கு போனில் தொடர்பு கொண்டால் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து நடவடிக்கை எடுக்கின்றனர். இந்த குழு காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ரோந்து செல்வர் என்றார்.
Related Tags :
Next Story