ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 2 Jan 2022 10:08 PM IST (Updated: 2 Jan 2022 10:08 PM IST)
t-max-icont-min-icon

அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேதாரண்யம், ஜன.3-
 அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அனுமன் ஜெயந்தி
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் எதிரே தனி சன்னதி கொண்ட ஆஞ்சநேயருக்கு அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, மலர்கள் மற்றும் துளசி மாலையால் அலங்கரிக்கப்பட்டு  தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.     இதேபோல நாகக்குடையான் சீனிவாசன் பெருமாள் கோவில்,, கோவில்பத்து என்னை ஆளும் கண்ணபெருமான் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. 
நாகை
நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர், சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், வெளிப்பாளையம் ராமர் மட தெருவிலுள்ள ராமர் மடத்தில் உள்ள ஆஞ்சநேயர், மேலவாஞ்சூர் ஜெயவீர ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களில் உள்ள ஆஞ்சநேயர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டும், வடைமாலை சாற்றியும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தலைஞாயிறு
தலைஞாயிறை அடுத்த ஓரடியம்புலத்தில் உள்ள கரியமாணிக்க பெருமாள் கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் பக்த விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் துளசி மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 இதேபோல தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் வைராக்கிய ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சந்தனகாப்பு சாத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Next Story