ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்


ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 2 Jan 2022 10:20 PM IST (Updated: 2 Jan 2022 10:20 PM IST)
t-max-icont-min-icon

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீடாமங்கலம்:
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
விவசாய தொழிலாளர் சங்க கூட்டம் 
தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்  நீடாமங்கலம், வலங்கைமான் ஒன்றியக்குழுக்களின் கூட்டம் நீடாமங்கலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் பூசாந்திரம் தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் பி.கந்தசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க பொருளாளர் என்.பாலையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். 
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மழைகாலங்களில் வேலையில்லாமல் உள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பழுதடைந்த  தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிதாக கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும்.  
தொடர் காத்திருப்பு போராட்டம்
மாநில அரசு வெள்ள நிவாரணமாக மத்திய அரசிடம் கேட்ட நிதியை தாமதமில்லாமல் வழங்க வேண்டும். 2020-2021-ம் ஆண்டுகளில் விவசாயிகள் கட்டிய இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுத்தரக்கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வருகிற 5-ந்தேதி முதல் நடைபெறும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் வலங்கைமான், நீடாமங்கலம் ஒன்றியம் சார்பில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story