அனுமன் ஜெயந்தி விழா
திருவாரூர் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருவாரூர்
திருவாரூர் வடக்கு வீதியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதையொட்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் கமலாலயம் மேல்கரையில் உள்ள பாலஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி நடந்தது. விழாவையொட்டி காலை முதலே பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் அபிஷ்டவரதராஜர் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் 16 அடி உயர விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். அமாவாசையையொட்டி ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகையன், தலைமை பட்டாச்சாரியார் வெங்கடேசன் மற்றும் பலர் செய்து இருந்தனர்.
வடுவூர்
வடுவூர் தேரடி பகுதியில் உள்ள தேரடி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அப்போது ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தெற்கு வீதியில் உள்ள பாலஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விளக்குடி கஸ்தூரிரெங்க பெருமாள் கோவிலில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வடைமாலை அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமக்கோட்டை
திருமக்கோட்டை ரங்கநாதர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வெற்றிலை, வடை மாலை ஆகியவை அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story