1000 கிலோ மஞ்சள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அருகே வேதாளை பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கிய 1000 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது.
பனைக்குளம்,
இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அருகே வேதாளை பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கிய 1000 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரகசிய தகவல்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை தெற்கு தெரு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மஞ்சள் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் மகேசுவரி தலைமையில் கியூ பிரிவு போலீசார் வேதாளை பகுதியில் உள்ள வீடு ஒன்றை சோதனை செய்தனர்.
அப்போது அந்த வீட்டில் பதுக்கிய சுமார் 26 மூடைகளில் இருந்த 1000 கிலோ மஞ்சளை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து மஞ்சள் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த வீடு யாருக்கு சொந்தமானது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல்
மேலும் இலங்கைக்கு கடத்துவதற்காக அந்த மஞ்சள் மூடைகள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இதே வேதாளை தெற்கு தெரு பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கிய மஞ்சள் மூடைகள், சுறா மீன் துடுப்பு, கடல் அட்டை உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story