பேட்டரி மோட்டார் சைக்கிள் வடிவமைத்த விவசாயி
பெட்ரோல் செலவை தவிர்க்க பேட்டரி மோட்டார் சைக்கிளை விவசாயி வடிவமைத்துள்ளார்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலமுருகன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய மோட்டார் சைக்கிளை தனது விவசாய பணிகளுக்கும் அன்றாட பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் தொடர்ந்து பெட்ரோல் விலை ரூ. 100-ஐ கடந்து உயர்வை எட்டியது. இதனால் விவசாயி பாலமுருகனுக்கு பெட்ரோல் செலவீனம் மாதம் ரூ.4 ஆயிரத்தை கடந்தது.
இதனால் நஷ்டம் ஏற்படும் என உணர்ந்து தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோலை பயன்படுத்தாமல் தவிர்த்து மின் சாரத்தில் சார்ஜ் செய்து பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைத்தார். இதற்காக மதுரை சென்ற விவசாயி ரூ. 48 ஆயிரத்துக்கு உதிரிபாகங்கள், பேட்டரி ஆகியவற்றை வாங்கி வந்து பேட்டரியில் இயங்கும் வகையில் தானாகவே வடி வமைத்து சோதனை முறையில் இயக்கி சாதனை படைத் துள்ளார். இதன் மூலம் தற்போது முழுமையாக சார்ஜ் செய்து 70 கிலோமீட்டர் தொலைவிற்கு 250 கிலோ எடை கொள் ளளவை சுமந்து பயணித்து வருவதாக விவசாயி பாலமுருகன் தெரிவித்தார். இதுபோன்ற வாகனங்களை பயன்படுத்தினால் புகை, சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் அவற்றை தவிர்த்து மாதம் குறைந்தது ரூ.3000 சேமிக்கலாம். இதன் மூலம் நமது நாட்டின் பொருளாதாரம், தனி நபர் வாழ்க்கைத் திறன் மேம்படும் என்றார்.
Related Tags :
Next Story