புனித மூவரசர் திருக்காட்சி பெருவிழா


புனித மூவரசர் திருக்காட்சி பெருவிழா
x
தினத்தந்தி 2 Jan 2022 10:57 PM IST (Updated: 2 Jan 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே பி.முத்துச்செல்லாபுரத்தில் புனித மூவரசர் திருக்காட்சி பெருவிழாவையொட்டி தேர்பவனி நடைபெற்றது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே பி.முத்துச்செல்லாபுரத்தில் புனித மூவரசர் திருக்காட்சி பெருவிழாவையொட்டி தேர்பவனி நடைபெற்றது.
மூவரசர் ஆலயம்
குழந்தை ஏசு பிறந்ததும் அவரை காணச்சென்ற 3 அரசர் களான புனித கஸ்பார், புனித மெல்கியூர், புனித பல்த்தசார் ஆகியோரின் நினைவாக ராமநாதபுரம் அருகே உள்ள பி.முத்துச்செல்லாபுரம் பகுதியில் மூவரசர் ஆலயம் அமைந்து உள்ளது. பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டி புனித மூவரசர் திருக்காட்சி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
 இதன்படி இந்த ஆண்டு மூவரசர் திருக்காட்சி பெருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஆலயம் முன்புறம் அமைந்துள்ள பிரமாண்ட கொடிக் கம்பத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் நடைபெற்று நேற்று முன்தினம் 1-ந் தேதி மாலை திருவிழா திருப்பலியும், புனிதர்களின் ஆடம்பர தேர்பவனியும் சிறப்பாக நடைபெற்றது. 
திருப்பலி
அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய நிகழ்வு களில் ஒன்றான இரவை பகலாக்கும் வகையில் வாணவெடி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று காலை பெருவிழா புது நன்மை மற்றும் கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றதோடு மாலையில் பொங்கல் வைக்கும் வைபம் நடைபெற்றது. விழாவின் நிறைவாக நேற்று மாலை ஆலயம் முன்பு ஏற்றப்பட்ட பிரமாண்டமான கொடி இறக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் திருவரங்கம் பங்குத்தந்தை செபஸ்தியான், பள்ளி தாளாளர் அமல சிங்கராயர், உப பங்குத்தந்தை சஜு மற்றும் பி. முத்துச்செல்லாபுரம் பங்குத்தந்தைகள், கிராம இறைமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story