விருத்தாசலம் தாலுகா அலுவலகம் எதிரே கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்ததால் பரபரப்பு


விருத்தாசலம் தாலுகா அலுவலகம் எதிரே கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Jan 2022 11:09 PM IST (Updated: 2 Jan 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

பரபரப்பு

விருத்தாசலம், 

விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கான பிரிவு இயங்கி வருகிறது. இங்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் அட்டையில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள குப்பை மேட்டில் நேற்று கட்டுக்கட்டாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தன. மேலும் ஒரே பெயர் விலாசம் கொண்ட அடையாள அட்டைகள், அடையாள அட்டைகள் விண்ணப்பித்ததற்கான, வரிசை எண்கள் கூடிய ரசீதுகளுடன் ரப்பர் பேண்ட் போட்டு கட்டுக்கட்டாக கிடந்தது. இதை காண அங்கு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், குப்பை மேட்டில் வாக்காளர் அடையாள அட்டைகள் வீசப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகளை மர்மநபர்கள் யாரேனும் எடுத்துச் சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. ஆகவே வாக்காளர் அடையாள அட்டைகளை குப்பைமேட்டில் வீசிய நபர்கள் யார்? என்பது குறித்தும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தவேண்டும் என்றனர்.

Next Story