தவறி விழுந்து கொத்தனார் சாவு
தவறி விழுந்து கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அடுத்த தேளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டி (வயது50). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். ஆண்டி சிவகங்கையை அடுத்த கூத்தாண்டன் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் சாரம் கட்டி சுவற்றில் பூசிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரை மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story