சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ்-பயணிகள் உயிர் தப்பினர்


சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ்-பயணிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 2 Jan 2022 11:35 PM IST (Updated: 2 Jan 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

திருமயத்தில் சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் இறங்கியது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

திருமயம், 
மதுரையில் இருந்து தஞ்சாவூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 5 மணியளவில் திருமயம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது சமத்துவபுரம் அருகே சாலையின் இருபுறமும் திடீரென மாடுகள் குறுக்கே சென்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக சென்று சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர். மேலும், பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருமயம் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.

Next Story