தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 Jan 2022 11:47 PM IST (Updated: 2 Jan 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

ஓடையை தூர்வார வேண்டும்
குலசேகரபுரம் பகுதியில் கழிவுநீர் ஓடைகள் சரியாக தூர் வாரப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், ஓடையில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசு உற்பத்தி அதிகமாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                   -ராசோ.கோபால், குலசேகரபுரம். 
அகற்ற வேண்டிய மின்கம்பம்
இறச்சகுளம் ஊராட்சியில் அம்பலம்திருத்தி, நாட்டையர் நகர் பகுதியில் உள்ள ஒரு மின்கம்பம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சு  பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                             -ராஜேஸ்வரி,  நாட்டையர் நகர். 
உடைந்த இருக்கைகள்
தடிக்காரன்கோணம் பஞ்சாயத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் உணவு கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளது. கட்டிடத்தின் உள்ளே உள்ள இ௫க்கைகள் உடைந்து காணப்படுகிறது. எனவே, அவற்றை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                       -வே. மணிகண்டன், தடிக்காரன்கோணம்.
சாலையில் வீணாகும் குடிநீர்
நாகர்கோவில், பால்பண்ணை சமீபம் ஆவின் பாலகம் எதிரே சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையில் பள்ளம் தோன்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக வாகனங்களில் செல்கிறவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். மேலும் குடிநீர் வீணாக சாலையில் பாய்ந்து செல்கிறது. எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                        -எட்வின் சார்லஸ், நாகர்கோவில்.
தெருநாய்கள் தொல்லை
சுசீந்திரம் பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை சாலைகளில் சுற்றி திரிந்து நடந்து செல்கிறவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களையும் கடிக்க துரத்துகின்றன. இதனால், அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
                                            -சித்தார்த்தன், வடக்குத்தாமரைகுளம். 
 குரங்குகள் அட்டகாசம்
அழகியபாண்டியபுரம் அருகில் உள்ள காட்டுப்புதூர், தெற்கு காலனி பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவை வீட்டு வளாகத்தில் புகுந்து குழந்தைகள், பெண்களை அச்சுறுத்துவதும், உணவு பொருட்களை தூக்கி செல்வதுமாக உள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் இன்னலுக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே, பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                          -சி.எஸ்.குமார், காட்டுப்புதூர்.
காத்திருக்கும் ஆபத்து
குளச்சல், நஜ்முல்இஸ்லாம் அரபி மதரஸா முன்பு கழிவுநீர் ஓடையின் மேலே இரும்பு குழாய்கள் மூலம் மூடப்பட்டுள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.  தற்போது குழாய்கள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, ஆபத்து ஏற்படும் முன்பு அவற்றை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                    -எஸ்.முகமது சபீர், குளச்சல். 


Next Story