வீடு இடிந்து விழுந்து மீனவர் சாவு மனைவி படுகாயம்
பட்டுக்கோட்டை அருகே பெய்த பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்து மீனவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பட்டுக்கோட்டை:-
பட்டுக்கோட்டை அருகே பெய்த பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்து மீனவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வீடு இடிந்து விழுந்தது
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சரபேந்திரராஜன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்கண்ணு (வயது70). மீனவர். இவருடைய மனைவி காளியம்மாள் (65). இவர்கள் கடந்த 30-ந் தேதி இரவு 10.45 மணி அளவில் தங்களுடைய ஓட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது பலத்த மழை பெய்ததால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த சின்னக்கண்ணு, அவருடைய மனைவி காளியம்மாள் ஆகிய இருவரும் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
மனைவிக்கு சிகிச்சை
அங்கு சிகிச்சை பலனின்றி சின்னக்கண்ணு நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். காளியம்மாளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சின்னக்கண்ணுவுக்கு நாகூரான் (40), சித்திரவேலு (37) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பட்டுக்கோட்டை தாசில்தார் கணேஷ்வரன் நேரில் சென்று சின்னக்கண்ணு குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். வீடு இடிந்து விழுந்து மீனவர் பலியானது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story