தினத்தந்தி புகார் பெட்டி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 3 Jan 2022 12:45 AM IST (Updated: 3 Jan 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி மாவட்டம், முசிறி முதலியார் தெருவில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குப்பைகள் காற்றில் பறந்து ஆங்காங்கே விழுவதினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், முசிறி, திருச்சி. 
திருச்சி 39-வது வார்டு  ராமச்சந்திர நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் அப்பகுதியில் சாலையோரத்தில் கொட்டப்படுவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும்  இவற்றை கால்நடைகள் உண்ணுவதினால் அவற்றின் உடல்நிலையும் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றிவிட்டு இப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ராமச்சந்திரநகர், திருச்சி. 

கால்நடை மருத்துவமனை அமைக்கப்படுமா? 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் ஏராளமானவர்கள் கால்நடைகள் வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கால்நடைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மருவத்தூரில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ராயப்பன், மருவத்தூர், பெரம்பலூர். 

அபாயகரமான கோவில் 
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், கணேசபுரம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற  பிடாரி சடைச்சியம்மன் கோவில் கடந்த 1980-ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இந்த கோவில் சிதிலமடைந்து அபாய நிலையில் உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த கோவிலை புதுப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கணேசபுரம், கரூர். 

எரியாத மின் விளக்கு
 அரியலூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட முனியங்குறிச்சி, சேலத்தார்காடு மற்றும் மு.புத்தூர் கிராமங்களுக்கு செல்லும் முதன்மை சாலையாக உள்ள நாகமங்கலம் சாலையில் முனியங்குறிச்சி பிரிவு பாதையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளும், சைக்கிளில் செல்பவர்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருப்பதினால் நடந்து செல்பவர்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து இருப்பதால் இப்பகுதியில் சமூக விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ரெட்டிப்பாளையம், அரியலூர். 

பயணிகளை அச்சுறுத்தும் நாய்கள் 
தமிழகத்தில் ஆங்காங்கே நாய்கள் குழந்தைகள், பொதுமக்களை கடித்து வரும் நிலையில், திருச்சி ரெயில் நிலையத்தில் 2-வது நடை மேடையில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் ரெயில் பயணிகள் பெரிதும் அச்சத்துடனேயே திருச்சி ரெயில் நிலையத்தில் இறங்கி செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருச்சி.

தார் சாலை அமைக்கப்படுமா? 
புதுக்கோட்டை மாவட்டம் , குளத்தூர் தாலூகா, கீரனூரில் பஸ் நிறுத்தம்  பின்பிறம் உள்ள சாலை நீண்ட வருடங்களாக பராமரிப்பு இன்றி மண் சாலை போல் காட்சி அளிக்கிறது. இதனால்  சாலையில் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறப்பதால் சாலையில் நடந்து செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கீரனூர், புதுக்கோட்டை.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா தவளப்பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை மண்  சாலையாக உள்ளதால் இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மழை பெய்யும்போது இந்த சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் சாலையில் நடந்து செல்லும் முதியவர்கள், பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், தவளப்பள்ளம், புதுக்கோட்டை. 

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் 
திருச்சி காஜாமலை ஜே.ஜே.நகர் பகுதியில் அமைந்துள்ள முகம்மது நகரில் முதல் தெரு, இரண்டாவது தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்  மழைநீர் தேங்கியுள்ளதாலும்,பள்ளிவாசல் தெருவில் குடிதண்ணீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு சரி செய்யப்படாமல் குடிதண்ணீர் வீணாகி சிறுவர்கள் விளையாடும் பூங்காவில் நான்கு மாதமாக தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், முகம்மது நகர், திருச்சி. 

சிதிலமடைந்த ஆரம்ப சுகாதார நிலையம் 
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள அணியாப்பூர் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் ஆங்காங்கே சிதிலம் அடைந்து காணப்படுகிறது. நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சும்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அணியாப்பூர், திருச்சி. 

வாய்க்கால் பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் 
திருச்சி மாவட்டம் சமயபுரம் கூத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பின்புறம் உள்ள சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. மேலும் தண்ணீர் செல்லும் வகையில் வாய்க்கால் தோண்டப்பட்டு பள்ளமாக உள்ளது. இவற்றில் தண்ணீர் தேங்கி நிற்பதினால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதி மக்கள் இரவில் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் குழந்தைகள் இந்த பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கூத்தூர், திருச்சி. 


Next Story