அனுமன் ஜெயந்தி விழா: முளைப்பாரி எடுத்து பெண்கள் வழிபாடு


அனுமன் ஜெயந்தி விழா: முளைப்பாரி எடுத்து பெண்கள் வழிபாடு
x
தினத்தந்தி 3 Jan 2022 1:18 AM IST (Updated: 3 Jan 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி முளைப்பாரி எடுத்து பெண்கள் வழிபட்டனர்.

பனவடலிசத்திரம்:

அனுமன் ஜெயந்தி
பனவடலிசத்திரம் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல் அனுமந்தபுரி ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. காலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், அனுமன் ஹோமம் நடந்தது.
அதனைத்தொடர்ந்து அபிஷேகம், மலர் அலங்காரம், வடைமாலை சாத்தி வழிபாடு, சந்தன அலங்காரம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள ராமர், லட்சுமணர், சீதா, சப்த கன்னிமார், வனதுர்க்கை சித்தர் ஜீவ சமாதி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து வலம் வந்து பாட்டு பாடினர். பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

குறும்பலாப்பேரி
பாவூர்சத்திரம் அருகே குறும்பலாப்பேரில் உள்ள ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
பக்தர்கள் வெற்றிலை மாலை, 1,008 வடை மாலை சாத்தி வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story