வாலிபர் வெட்டிக்கொலை


வாலிபர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 3 Jan 2022 1:19 AM IST (Updated: 3 Jan 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

மதுரை சிலைமான் அருகே பள்ளி முன்பு வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

மதுரை,

மதுரை சிலைமான் அருகே பள்ளி முன்பு வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

அரசு பள்ளி

மதுரை மாவட்டம் சிலைமான் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கல்மேடு பகுதியை சேர்ந்தவர் பிரேம் (வயது 26).இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் அவர், சக்கிமங்கலம் பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே நின்று கொண்ருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் திடீரென பிரேமை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் துரத்தியது. அவர்களை பார்த்ததும் அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். அந்த கும்பல் அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. 
இதில் பிரேமின் உடலில் பல இடங்களில் வெட்டுகாயங்கள் விழுந்தன. இதில் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேேய அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதனை தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

விசாரணை

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் சிலைமான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் விசாரணை நடத்தினார்.
பிரேமிற்கும் அந்த பகுதியை சேர்ந்த நபர்கள் யாருக்காவது முன்விரோதம் இருக்கிறதா, அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். பிரேமை கொலை செய்த நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story