செங்கோட்டையில் வரிகள் செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை


செங்கோட்டையில் வரிகள் செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Jan 2022 1:35 AM IST (Updated: 3 Jan 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை நகராட்சியில் வரிகள் செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை, குத்தகை இனம், காலிமனை வரி உள்பட வரி இனங்களை காலதாமதம் செய்யாமல் நகராட்சி அலுவலக கணினி மையத்தில் பொதுமக்கள் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். 
இந்த தகவலை செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் இளவரசன் தெரிவித்து உள்ளார்.

Next Story