தென்காசி மாவட்ட பேரூராட்சிகளில் வீட்டு குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


தென்காசி மாவட்ட பேரூராட்சிகளில் வீட்டு குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 3 Jan 2022 1:41 AM IST (Updated: 3 Jan 2022 1:41 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் வீட்டு குடிநீர் இணைப்பு வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் வீட்டு குடிநீர் இணைப்பு இல்லாத கட்டிடங்களுக்கு புதிய வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கிட விண்ணப்பங்கள் பெறுவதற்கு 6-1-2022 (வியாழக்கிழமை) மற்றும் 7-1-2022 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு முகாம்கள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
எனவே புதிதாக வீட்டு குடிநீர் இணைப்பு பெற விரும்பும் பயனாளிகள் விண்ணப்பங்களை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்திலோ அல்லது https://tenkasi.nic.in/form-category/town-panchayat-forms/ இணையதளத்திலோ விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து நடப்பு ஆண்டுக்குரிய சொத்து வரி செலுத்தப்பட்ட ரசீது நகல், பதிவு கட்டணம் மற்றும் முன் வைப்புத் தொகைக்கு வரைவோலை ஆகியவற்றை சமர்ப்பித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story