புதிதாக 2 பேருக்கு கொரோனா


புதிதாக 2 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Jan 2022 1:49 AM IST (Updated: 3 Jan 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று தலா 2 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 3 பேரும் நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 26 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 6 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 125 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 128 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது.

Next Story