தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 3 Jan 2022 2:11 AM IST (Updated: 3 Jan 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த சாலை 
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி எஸ்.எஸ். நகரில் விநாயகர் கோவில் முன்பு அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும், வாகனங்களில் செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை சரிசெய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துப்பாண்டியன், சிங்கம்புணரி. 
எரியாத தெருவிளக்கு 
விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டி கிராமத்தில் ஆர்.சி. தெருவில் உள்ள தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இப்பகுதி இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. பெண்களும், சிறுவர், சிறுமிகளும் இரவில் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். மேலும் சமூக விரோதிகள் திருட்டு, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே, இங்குள்ள எரியாத தெருவிளக்கை சரிசெய்ய வேண்டும். 
பிரான்சிஸ், இனாம்ரெட்டியபட்டி. 
விபத்து அபாயம் 
மதுரை மூன்று மாவடியிலிருந்து அய்யர்பங்களா வரை புதிதாக நான்கு வழிச்சாலை போடப்பட்டுள்ளது. இங்கு சில வாகன ஓட்டிகள் ஒருவழிச்சாலையை முறையாக கடைபிடிப்பதில்லை. இதனால் விபத்து அபாயம் உள்ளது. மேலும், மூன்றுமாவடி ரவுண்டானா இருபுறமும் பாதசாரிகள் சாலையை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பூமிநாதன், மதுரை. 
கட்டிட கழிவுகள் 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதிநகர் அருகில் காரியார் தெருவில் சாலை அமைக்கும் பணிக்காக வீடுகளின் முன்பகுதி இடிக்கப்பட்டன. ஆனால் இந்த இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகளை அகற்றாமல் அப்படியே விட்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் தெருவில் நடப்பதற்கு சிரமமாக உள்ளது. வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?                      
     ஹிதாயத், பரமக்குடி. 
பள்ளி மேற்கூரையில் விரிசல் 
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா வைகைவடகரை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் மேற்கூரை ஆங்காங்கே விரிசல் விழுந்து காணப்படுகிறது. எப்போது பெயர்ந்து விழும் என்ற அச்சத்தில் மாணவ, மாணவிகள் உள்ளனர். எனவே, உடனடியாக இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கார்த்திகேயன், வைகைவடகரை. 
பொதுமக்கள் சிரமம் 
மதுரை மாநகராட்சி கான்பாளையம் 2-வது குறுக்கு தெருவில் சிறிய மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தேங்கி நிற்கும் தண்ணீரில் இருந்து கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?                                   
  பார்த்தசாரதி, மதுரை. 
குப்பை தொட்டி தேவை 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெள்ளைகரை ரோட்டில் 3 குப்பை தொட்டிகள் இருந்தன. தற்போது அந்த குப்பை தொட்டிகளை அகற்றி விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் குப்பைகளை சாைலயோரத்தில் கொட்டும் நிலை உள்ளது. சுகாதார சீர்கேடாக உள்ளதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மீண்டும் அப்பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.                                              
   குமார், சாத்தூர். 

Next Story