பூலாம்பட்டி பகுதியில் காற்றுடன் கூடிய மழைக்கு நெல், கரும்புகள் சாய்ந்தன


பூலாம்பட்டி பகுதியில் காற்றுடன் கூடிய மழைக்கு நெல், கரும்புகள் சாய்ந்தன
x
தினத்தந்தி 3 Jan 2022 2:31 AM IST (Updated: 3 Jan 2022 2:31 AM IST)
t-max-icont-min-icon

பூலாம்பட்டி பகுதியில் காற்றுடன் கூடிய மழைக்கு நெல் பயிர்கள், கரும்புகள் சாய்ந்தன.

எடப்பாடி:
எடப்பாடி அருகே பூலாம்பட்டி, மூலப்பாறை, பிள்ளுக்குறிச்சி, கூடக்கல், காட்டூர் பகுதியில் அதிகளவில் நெல், கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் கதிர்கள் பிடிக்க இருந்த நிலையில் நெற்பயிர்கள் சாய்ந்தன. மேலும் ஆலை கரும்புகள் சரிந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அவர்கள் சாய்ந்த நெல், கரும்பு பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story