ஈரோட்டில் மரம் விழுந்து காவலாளி சாவு- உட்கார்ந்த நிலையிலேயே உயிர் பிரிந்த பரிதாபம்


ஈரோட்டில் மரம் விழுந்து காவலாளி சாவு- உட்கார்ந்த நிலையிலேயே உயிர் பிரிந்த பரிதாபம்
x
தினத்தந்தி 3 Jan 2022 3:52 AM IST (Updated: 3 Jan 2022 3:52 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் மரம் முறிந்து விழுந்ததில் காவலாளி ஒருவர் உட்கார்ந்த நிலையிலேயே பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு
ஈரோட்டில் மரம் முறிந்து விழுந்ததில் காவலாளி ஒருவர் உட்கார்ந்த நிலையிலேயே பரிதாபமாக இறந்தார்.
மரம் விழுந்தது
திருப்பத்தூர் மாவட்டம் கண்டவராயன்பட்டியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 58). இவர் ஈரோடு வைராபாளையம் நாட்ராயன் கோவில் வீதியில் சாயப்பட்டறை உரிமையாளர் ஒருவருக்கு சொந்தமான காலி இடத்தை பராமரித்து காவலாளியாக இருந்து வந்தார். இதனால் அவர் அங்கேயே தங்கி இருந்தார்.
ஈரோட்டில் நேற்று முன்தினம் மாலையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது கருப்புசாமி ஒரு மரத்திற்கு அருகில் உட்கார்ந்து சமையல் பாத்திரங்களை கழுவி கொண்டு இருந்தார். இந்தநிலையில் காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மரம் திடீரென வேரோடு சாய்ந்து கருப்புசாமியின் மீது விழுந்தது.
சாவு
இதில் கருப்புசாமி உட்கார்ந்த நிலையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் கருப்புசாமியின் மீது மரம் விழுந்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை. நேற்று காலையில் இடத்தின் உரிமையாளர் அங்கு சென்று பார்த்தார். அப்போது மரம் விழுந்து கிடந்த இடத்துக்கு சென்றபோது, கருப்புசாமி பிணமாக கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி கருங்கல்பாளையம் போலீசாருக்கும், ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கும் அவர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இதையடுத்து இறந்த கருப்புசாமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story