அந்தியூர் அருகே சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை: 2 ஏக்கர் கரும்புகள் சாய்ந்து நாசம்


அந்தியூர் அருகே சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை: 2 ஏக்கர் கரும்புகள் சாய்ந்து நாசம்
x
தினத்தந்தி 3 Jan 2022 3:53 AM IST (Updated: 3 Jan 2022 3:53 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ததில் 2 ஏக்கர் பரப்பளவிலான கரும்புகள் சாய்ந்து நாசம் ஆனது.

அந்தியூர்
அந்தியூர் அருகே சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ததில் 2 ஏக்கர் பரப்பளவிலான கரும்புகள் சாய்ந்து நாசம் ஆனது.
கரும்புகள் சாய்ந்தன
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மிதமான வெயில் இருந்தது. இந்த நிலையில் மாலை 5 மணி முதல்     6 மணி வரை சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. அதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதில் கெட்டிசமுத்திரம் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றும் வீசியது. இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த பகுதியில் உள்ள ஏராளமான தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 2 ஏக்கர் பரப்பளவிலான கரும்புகள் சாய்ந்தன.
அதிகாரிகள் பார்வையிட்டனர்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, ‘கரும்புகள் 10 மாத பயிராகும். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கரும்புகளை சாகுபடி செய்தோம். இவை இன்னும் 4 மாதத்தில் வெட்டுவதற்கு தயார் நிலையில் இருந்தது. அதற்குள் நேற்று முன்தினம் வீசிய சூறாவளிக்காற்றில் கரும்புகள் சாய்ந்தன. இது எங்களை வேதனைப்படுத்தியுள்ளது’ என்றனர்.
இதுபற்றி அறிந்ததும் வேளாண் அதிகாரிகள் நேரில் சென்று சேதமடைந்த கரும்புகளை பார்வையிட்டு சென்றனர்.

Next Story