பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தில் குறைஇருந்தால் புகார் தெரிவிக்கலாம்; கலெக்டர் செந்தில்ராஜ்


பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தில் குறைஇருந்தால் புகார் தெரிவிக்கலாம்; கலெக்டர் செந்தில்ராஜ்
x
தினத்தந்தி 3 Jan 2022 5:18 PM IST (Updated: 3 Jan 2022 5:18 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தில் குறைகள் இருந்தால் கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்

தூத்துக்குடி:
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தில் குறைகள் இருந்தால் கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழக அரசு 2022-ம் ஆண்டு மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், 50 கிராம் முந்திரி, 50 கிராம் திராட்சை, 10 கிராம் ஏலக்காய், 500 கிராம் பாசிபருப்பு, 100 கிராம் நெய், 100 கிராம் மஞ்சள்தூள், 100 கிராம் மிளகாய் தூள், 100 கிராம் மல்லித்தூள், 100 கிராம் கடுகு, 100 கிராம் சீரகம், 50 கிராம் மிளகு, 200 கிராம் புளி, 250 கிராம் கடலைபருப்பு, 500 கிராம் உளுத்தம்பருப்பு, 1 கிலோ ரவை, 1 கிலோ கோதுமை மாவு, 500 கிராம் உப்பு, ஒரு துணிப்பை மற்றும் ஒரு கரும்பு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு வழங்க உத்தரவிட்டு உள்ளது.
குறைகள்
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் ரேஷன்கார்டு தாரர்களுக்கும் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மின்னணு ரேஷன் கார்டில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் மட்டும் ரேஷன் கடைக்கு விலைக்கடைக்கு சென்று தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம். 
மேலும் பொங்கல் பரிசு வழங்கும் பணி சீராக நடைபெறுவதை கண்காணித்திட, வட்ட அளவில் துணை ஆட்சியர்கள் கண்காணிப்பு அலுவலர்களாகவும், நடமாடும் கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்த புகார்கள், குறைகள் ஏதும் இருந்தால், பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண். 0461-2341471-ல் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

-

Next Story