தர்மபுரியில் மனைவி கோபித்து சென்றதால் கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை
தர்மபுரியில் மனைவி கோபித்து சென்றதால் மனமுடைந்த கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை தெற்கு ரெயில்வே லைன் ரோட்டை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 45). கட்டிட மேஸ்திரியான இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். சாமிநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி லட்சுமி கோபித்து கொண்டு காமலாபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த சாமிநாதன் மதுபோதையில் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story