கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 3 Jan 2022 9:56 PM IST (Updated: 3 Jan 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட முகவரியில் வசிக்கும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காப்பீடு முகவர் பணிக்கு 18 முதல் 50 வயதுக்கு உட்பட்ட 10-ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பற்ற அல்லது சுய தொழில் செய்யும் இளைஞர்கள், முன்னாள் ஆலோசகர்கள், முன்னாள் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல பணியாளர்கள், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்கள், சுய உதவிக்குழுக்களில் செயல்படுவோர், கிராம தலைவர் அல்லது கிராம சபை உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பாலிசியின் பிரிமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் முகவர்கள் ரூ.5 ஆயிரம் காப்பீட்டுத்தொகையாக, தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரம் வடிவில் அருகே உள்ள அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும். தங்களது ஏஜென்சி காலம் முடிக்கப்படும்போது காப்பீடு தொகையாக செலுத்தப்பட்ட பணம் தகுந்த வட்டியுடன் திருப்பி வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்கள் அருகே உள்ள அஞ்சல் நிலையங்களில் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஆவணங்களுடன் வருகிற 27-ந்தேதிக்குள் முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி - 628501 என்ற முகவரிக்கு பதிவஞ்சலில் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு கோவில்பட்டி - 04632-220368, சங்கரன்கோவில் - 04636-222313, தென்காசி 04633-222329 என்ற தொலைபேசி எண்களில் தலைமை அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம். 
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Next Story