மூங்கில்துறைப்பட்டில் மின்மாற்றியை சீரமைக்கக்கோரி விவசாயிகள் தர்ணா
மூங்கில்துறைப்பட்டில் மின்மாற்றியை சீரமைக்கக்கோரி விவசாயிகள் தர்ணா
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு பழையூர் மேற்கு கொட்ட பகுதியில் உள்ள மின்மாற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதானது. இதனை சீரமைக்கக் கோரி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மூங்கில்துறைப்பட்டு இளமின் பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஆனால் பல மாதங்கள் கடந்த பிறகும் மின்மாற்றியை அதிகாரிகள் சீரமைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பழுதடைந்த மின்மாற்றியின் கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி மின்மாற்றியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் மூங்கில் துறைப்பட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story